மனதை தொட்ட கவிதை

இழப்பதற்கு ஏது உண்டு உன்னிடம் - உன் இளமையை தவிர?
உறக்கமா? ஓவர்டைம் என்னாவது?
விடுமுறையா? இருமடங்கு ஊதியமல்லவா?
நீ வியர்வை மட்டுமா சிந்தினாய்?
உன் குருதியும் இளமையும்சரிவர கலந்து
உணவிழந்து,உறக்கமிழந்து
என்னதான் ஈட்டினாய்.

மணமுடித்து மறுவாரம் நீ இங்கெ!
மனமுழுவதும் உன் நினைவுடன்
மனையாள் அங்கே
தொலைபேசி மணி
உங்களின் தாம்பத்ய சங்கீதம்!
தபால்காரர் தேவதூதர்.

இளமையை தனிமையில் நீயும்
அழுகையில் அவளும் செலவழித்து ஈட்டுவதென்ன?
"மன"முறிவுகளும்"
மண"முறிவும்தானே?
பிறந்த சிசுவின்
முகம் பார்க்க
கடிதன் மூலம் பிறவி பயன் பெறுவது

பெர்மிட் முடிந்து நேரில் பார்க்கும்போது!
அழுத குழந்தை
அரண்டு ஒதுங்கும் - யார்
இந்த மாமா? என்று
சகோதரி திருமணம் 'குறு'வட்டில்
அதுவும் பார்க்க கிடைப்பது நடுனிசியில்
ஓவர்டைம் கழிந்து
பார்த்தபின் உறக்கம் ஏது?
உந்தன் நினைவுகளால்.

இறப்புகளுக்கு இங்கிருந்தே இறுதிக்கடன்!
நேரில்சென்றால் ஏறும் கடன்
உன் உறவின் மதிப்பு இவ்வளவுதான்.
இதற்காகத்தான் ஆசைபட்டாயோ??

நண்பனே??

நன்றி : தமிழ் முரசு (சிங்கை)

Tags:

1 comments:

Unknown said...

tamiz_dts@yagoo.com
yallama superda